நடுவண் அரசால் எரிவாய்வு திட்டங்கள் ஏன் தமிழகத்தில் செயல்படுத்த ஆர்வம் காட்டுகின்றன?
இந்திய பொருளாதாரம் இறக்குமதி செய்யப்படும் பெர்டோலிய பொருட்களை சார்ந்த இருக்கிறது, அதிகமான பணம் இதற்காக செலவு செய்யப்படுகிறது. இந்த இறக்குமதியை சரி செய்துவிட்டால் சுலபமாக முன்னேறலாம் என்று அரசாங்கம் நினைக்கிறது, நாட்டில் சில இடங்களில் எரிவாய்வு இருப்பதை சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வுசெய்தனர். அதை செயல்படுத்த தேவையான பணம் இவர்களிடம் இப்போது இருக்கிறது, பிறகு இவர்களுக்கு தேவையான இடம்தான் பிரச்னை, கடைசியாக இவர்கள் தேர்தெடுத்த இடம்தான் என் தமிழ்நாடு.
இங்கே செய்யப்படுத்த முக்கியமான காரணிகள், கடற்கரை பகுதிகள் நிறைந்த இடம், பாதுகாப்பு, பயனற்ற/எதிர்கால பயனற்ற நிலம்.
பாதுகாப்பில் பார்க்கும்போது வட இந்தியாவில் வாய்ப்புஇல்லை ஏனென்றால் போர் மூளும் சூழல் வருந்தபோது இந்த பெர்டோல் லிய அலைகளே அவர்களில் இலக்காக இருக்கும். அப்படி பார்க்கும் போது தென் இந்தியாவே இதற்கு வழி.
ஆந்திராவில் கடற்கரை பகுதிகள் அதிகம் அனால் இப்பொழுது இருக்கும் பிளவுபட்ட ஆந்திரா அரசியல் சூழலில் அங்கே இவர்கள் செயல்படுத்த முற்பட்டால் எதிர்விளைவுகள் சுலபமாக வந்துசேரும்.
கர்நாடகாவில் விவசாய நிலங்கள் முன்பு இருந்ததைவிட இப்பொழுது அதிகரித்துள்ளன காரணம் காவேரி நீர் தடுக்கப்பட்டு அவர்களின் இடங்களில் பயன்படுத்த படுகிறது , காவேரி நீர் செல்லாத இடங்களில் இப்பொழுது காவேரி நீர் கொண்டுசெல்ல படுகிறது. இந்த நீர் அனைத்தும் ஒரு காலத்தில் தமிழகம் வந்து சேர்த்து நம் வயல்களை பசுமையாக வைத்திருந்தன. அதனால் விவசாய நிலங்கள் அதிகரித்து முக்கிய விவசாய பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன, முக்கியமாக அரசியல் ஆதாயம் உள்ள மாநிலம்,
கேரளம் மலை பகுதிகள் கொண்டது இங்கு செயல்படுத்த சாத்தியக்கூறுகள் குறைவு.
என் தமிழகம் கடற்கரை நிறைந்த பகுதி, பாதுகாப்பு நிறைந்த பகுதி, கைதேர்ந்த தொழிலார்களை கொண்ட பகுதி, பயனற்ற நிலங்கள் நிறைய உருவாகும் பகுதி (காவேரி நீர் தடுக்கப்படுவதால்/பருவமழை பொய்ப்பு), இவர்களின் அணைத்து காரணிகளும் பொருந்திய பகுதி.
நெல் உற்பத்தி அதிகம் செய்யப்படும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு, இங்கே அந்த ஆலைகள் அமைத்தல் நெல் உற்பத்தி பாதிக்கப்படும் என்று இவர்களுக்கு நன்றக தெரியும் , அப்படி இருந்தும் என் இவர்கள் இடை செய்ய விரும்புகின்றனர் என்றல் , பெட்ரோலியம் ஆளை அமைத்து வரப்போகும் பயன்கள் விட நாம் விவசாய செய்து கிடைக்கும் பயன்கள் குறைவு இவர்களுக்கு. அனால் காலம் காலமாக அந்த நிலத்தில் கவுரவுமாக வாழ்ந்து வந்த நாம் மக்கள் கையேந்த வேண்டும்.
இதைதான் இவர்கள் நாடு முன்னேற ஒரு மாநிலத்தை தியாகம் செய்யலாம் என்றார்கள்.
"நெல் ஆடிய நிலம் எங்கே....
சொல் ஆடிய அவை எங்கே...
வில் ஆடிய நிலம் எங்கே....
Comments
Post a Comment